ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஓமான் மற்றும் ஈரானுக்கு இடையே முக்கிய உடன்பாடு

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கான பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமான் மற்றும் ஈரானுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

இது தொடர்பான கூட்டு யோசனையொன்று சர்வதேச சமூகத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.

 

பிராந்திய அமைதி மற்றும் கடற்படை பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

இந்த விசேட யோசனையின் மூலம் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பதற்கும், சர்வதேச வர்த்தகத்திற்கு சாதகமான பின்னணியை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதன் மூலம் பிராந்திய கடற்போக்குவரத்து நிலவரங்கள் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பிரபல நடிகர் நானா படேகர் திடீர் மரணம்!

பிரபல பொலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக தமது 75 ஆவது வயதில் இன்று (08) காலமானார்.   கோவாவில் உள்ள தனது வீட்டில்...

சவுதியில் இரண்டு விமான நிலையங்கள் மீது தாக்குதல்: மூவர் பலி, 36...

சவுதி அரேபியாவின் அப்ஹா (Abha) மற்றும் கிங் காலித் (King Khalid) சர்வதேச விமான நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள்...