Date:

தான் பிரசவித்த சிசுவைக் கழுத்து நெரித்துக் கொலை செய்த 15 வயது பாடசாலை மாணவி- அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியிலிருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிசுவின் சடலம் நேற்றுமுன்தினம் (24) காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சிசுவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும், சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஏறாவூர் சுகாதாரத்துறையில் டெங்கு ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் குறித்த இளைஞர், அந்தப் பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சோதனை நடவடிக்கைக்காகச் சென்ற நிலையில், புதிய காட்டுப்பள்ளி வீதியில் உள்ள 15 வயதுடைய சிறுமியின் வீட்டைச் சோதனை செய்த போது, சிறுமியுடன் தொடர்பு ஏற்படுத்தி சிறுமியைக் கர்ப்பமாக்கியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரசவித்த சிசுவைக் கழுத்து நெரித்துக் கொலை செய்த சிறுமி: வெளியான தகவல் | The 15 Year Old Girl Gave Birth

கர்ப்பமடைந்த சிறுமி பாடசாலை செல்வதை நிறுத்திய நிலையில், நேற்று தனது வீட்டில் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

பிறந்த சிசுவைக் கழுத்து நெரித்துக் கொலை செய்ததாகவும், சடலத்தை வீட்டின் முன்னால் உள்ள பாழடைந்த காணியில் வீசியுள்ளார் என்றும் பொலிஸ் விசரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த சிறுமியையும், இளைஞரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுமி பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...

ரோஹிதவின் மகள் மற்றும் மருமகனுக்கு பயணத் தடை

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத்...

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...