கொழும்பு கொட்டாஞ்சேனைக்கு செல்லும் வீதிக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கத்தினர் குறித்த பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவ இடத்திற்கு அதிகளவிலான பொலிஸார் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.