கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதிக்கு குறுக்கே சென்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று (22) அதிகாலை கொழும்பின் அதிக நெரிசல் மிக்க பகுதியான பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பஸ் ஓட்டுனர்களின் கவனயீனம் காரணமாக நேற்று முன்தினம் நானுஓயா பகுதியில் பாரியவிபத்து ஒன்று இடம்பெற்றது.
இதில் 7 பேர்வரையில் உயிரிழந்ததுடன் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.