Date:

கொலையை நியாயப்படுத்தாதீர்கள் ; எதிர்கால பேராசிரியரை இழந்துவிட்டோம் பல்கலைகழக மாணவியின் முகநூல் பதிவு

கொழும்பு பல்கலைகழகத்தின் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவி சத்துரி ஹன்சிகா தனது காதலனால் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதேவேளை இடம்பெறுகின்ற அனைத்து சம்பவங்கள் குறித்தும் மீம்ஸ் தயாரித்து வேடிக்கையாக்குவது இலங்கை மக்களின் இயல்பாக காணப்படுகின்றது. இதன் காரணமாகவே இது குறித்து எழுத நான் தீர்மானித்தேன்.

சத்துரி ஹன்சிகாவும் பசிந்து சத்துரங்கவும் 2020 இல் கொழும்பு பல்கலைகழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கற்றலை ஆரம்பித்தனர்.

உயர்தரத்தில் கணிதபிரிவில் தேர்ச்சிபெற்று ஆயிரம் கனவுகளுடன் அவர்கள் தங்கள் பல்கலைகழக வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

அனேக இளைஞர்கள் யுவதிகளை போல இவர்கள் காதலில் விழுந்தனர்.

பல்கலைகழகத்தில் நாங்கள் முன்னர் அதிகம் அறிந்திராதவர்களையே காதலிக்க ஆரம்பிக்கின்றோம். இரண்டு மூன்று மாதங்கள் பேசி பழக ஆரம்பித்த பின்னர் அவர்கள் நல்லவர்கள் எங்களிற்கு பொருத்தமானவர்கள் என நாங்கள் நம்ப ஆரம்பித்துவிடுகின்றோம்.

ஆனால் தொடர்ந்து காதலிக்கும்போதுதான் நாங்கள் அவர்களின் உண்மை முகங்களை அறிந்துகொள்கின்றோம் அவர்கள் எங்களிற்கு பொருத்தமானவரா இல்லையா என்பதை.

சத்துரி சிறந்த மாணவி தனது கல்வியை மிகுந்த ஆர்வத்துடன் முன்னெடுத்தவர். அவருக்கு சிறந்த நோக்கமிருந்தது இலக்கிருந்தது.

எனினும் பசிந்து ஆர்வம் இல்லாமிருந்த போதிலும் சத்துரி அவர் மீது அளவுகடந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் கல்வியை கடினமாக எடுக்காத பசிந்து சத்துரி காரணமாகவே கல்வியில் தீவிர ஆர்வம் காட்ட தொடங்கினார்.

இரண்டு வருடங்கள் இப்படி கழிந்தன.

சத்துரிகாக தெரிவானார் ஆனால் பசிந்து  மாணவனாக தொடர்ந்தும் காணப்பட்டார்.

எனினும் அவ்வாறான நிலையிலும் சத்துரி அவருக்கு கல்வியில் உதவுவதை நிறுத்தவில்லை தொடர்ந்து உதவினார்.

மூன்றாம் வருடத்தை அவர்கள் நெருங்கியவேளை அவர்கள் மத்தியில் பல கருத்துவேறுபாடுகள் தோன்றின.

இதன் காரணமாக சத்துரி அந்த உறவிலிருந்து விலகியிருக்க தீர்மானித்தார்.

ஆனால் பசிந்து அதனை விரும்பவில்லை.

Female uni. student found murdered at Race Course; fellow student arrested

இரண்டு மாதங்கள் சட்கள் மூலம் இது தொடர்ந்தது.

சத்துரி நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் எங்களை பிரிந்தார். பசிந்து தனது காதலியை கொலை செய்தார்.

அவர் வேறு எவரையும் காதலித்துவிடுவார் என்ற அச்சத்திலேயே பசிந்து இந்த கொலையை செய்தார் என்பது தற்போது எங்களிற்கு தெரியவந்துள்ளது.

அவரின் நடத்தையை நியாயப்படுத்தவேண்டாம் அவர் கொலையாளி.

நாங்கள் காதலித்த நபர் எங்களிற்கு பொருத்தமில்லை என்றால் அவரை நிராகரிக்கும் உரிமை எங்களிற்குள்ளது. இந்த கொலையை ஒருபோதும்  நியாயப்படுத்தாதீர்கள்.

நாங்கள் எதிர்காலத்தில்  பல்கலைகழகத்தில் பணியாற்றியிருக்க கூடிய ஒரு பேராசிரியரை இழந்துவிட்டோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...

மகனின் கைது குறித்து சபையில் உணர்ச்சிவசமானார் ஜகத்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விற்ற வாகனம் தொடர்பாக தனது...

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...