திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்

இன்று (07) அதிகாலை திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A09 வீதியில், நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 12 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இவ்வாறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாரம்மல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று, மீண்டும் அநுராதபுரத்திற்கு திரும்பும் வழியிலேயே இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!

ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து...