Date:

நாளாந்த மின்சார வெட்டு இந்த காலப் பகுதியில் இல்லை

இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்சார வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை உள்ளிட்ட உரிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள், எதிர்வரும் 23ம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த பரீட்சைகளில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 709 பாடசாலை மற்றும் பிரத்தியேக பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.

நாடு முழுவதும் உள்ள 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...