லங்கா சதொச நிறுவனம் 4 உணவு பொருட்களின் விலை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாவாக உள்ளது.
அத்துடன் உள்ளூர் வெள்ளை பச்சையரிசி விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 189 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
உள்ளூர் நாட்டரிசி விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 198 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும் அத்துடன் கோதுமை மா விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகுமென லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.