தனியார் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லை: கொழும்பில் அலைமோதும் வாகன வரிசைகள்!

  • தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

தற்போது டீசல் மற்றும் சுப்பர் டீசல் மாத்திரமே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

 

கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்தின்போது, தனியார் நிறுவனங்களுக்கும் எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

 

தற்போதுள்ள செலவுகளுக்கு ஏற்ப எரிபொருளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் நிறுவனங்கள் அறிவித்திருந்த பின்னணியிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

எனினும், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாததால், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கைகளால் தனியார் நிறுவனங்களுக்கு பாரிய நட்டம் ஏற்படுவதால், எரிபொருள் விநியோகத்தை அவர்கள் மேலும் மட்டுப்படுத்தியுள்ளதாக அகில இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டீ.வி. சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!

ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்

இன்று (07) அதிகாலை திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A09 வீதியில், நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு...