Date:

இலங்கையின் போராட்ட குணத்தைப் பாராட்டிப் பேசிய -அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா

இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது என்பது எப்போதும் சிரமமான காரியம். எனினும் எங்களிடமும் சிறந்த அணி இருக்கிறது. எனவே, இந்தத் தொடரில் சிறப்பாக விளையாட எதிர்பார்ப்பதுடன் உலகக் கிண்ணத்திற்கு முன்னர் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியாவுடான தொடர்களைப் பயன்படுத்துவோம் என இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.

Sri Lanka vs India Schedule 2023

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டி மும்பை வான்கடே விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (03) இரவு நடைபெறவுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை தசுன் ஷானக்க குறிப்பிட்டார்.

IND vs SL Live Telecast Channel, Online Streaming & Broadcast Details,  Schedule, Venue, Squads, Match Timings, of T20I Series of Sri Lanka tour of  India, 2023 - ProBatsman

இலங்கையின் போராட்ட குணத்தைப் பாராட்டிப் பேசிய இந்தியாவின் இருபது 20 கிரிக்கெட் , இலங்கை அணி பரபரப்பைத் தோற்றுவிக்கும் வகையில் விளையாடும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கைக்கு பதிலடி கொடுப்பதே தமது அணியின் பிரதான நோக்கம் என ஹார்திக் பாண்டியா தெரிவித்தார்.

 

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ அல்லது அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷன்க, லஹிரு குமார.

இந்தியா: இஷான் கிஷான், ருத்துராஜ் கய்க்வாட், சூரியகுமார் யாதவ், சஞ்சு செம்சன், ஹார்திக் பாண்டியா (தலைவர்), தீப்பன் ஹூடா, வொஷிங்டன் சுந்தர், ஹர்ஷால் பட்டேல், அர்ஷ்தீப் சிங், உம்ரன் மாலிக், யுஸ்வேந்த்ர சஹால்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...