Date:

முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்…

பாகிஸ்தான் அல்லது இந்தியாவிடமிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முட்டை இறக்குமதி செய்யப்படாவிட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்த நேரிடும் எனவும், நாட்டில் கேள்விக்கு ஏற்ற அளவில் முட்டை நிரம்பல் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது முட்டையின் விலை 60 முதல் 70 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், இந்தியா அல்லது பாகிஸ்தானிடமிருந்து முட்டை இறக்குமதி செய்தால் ஒரு முட்டை 30 முதல் 32 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் முட்டைக்கு கறுப்புச் சந்தை வர்த்தகம் நிலவி வருவதாகவும் இதனை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் என்.கே. ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு...

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...