நாட்டில் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும் எதிர்வரும் இரண்டாம் திகதியில் இருந்து பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.