மருதானை மற்றும் தெமட்டகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் காணப்படும் ரயில் சமிக்ஞை விளக்கு கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த இரண்டு நிலையங்களிலும் பல ரயில்கள் இன்று (27) காலையில் பயணத்தை தொடராமல் நிறுத்தப்பட்டன.
இதேவேளை, ரயில் சமிக்ஞை விளக்கு கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், நிறுத்தப்பட்ட ரயில்களில் பயணித்தவர்கள் ரயிலிலிருந்து இறங்கி வேறு வழிகள் ஊடாக தமது இடங்களை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.