எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை இன்று (21) முதல் மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், சிவப்பு பருப்பு கிலோ 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு 378 ரூபாவுக்கும், 425 கிராம் உள்ளுர் ரின் மீன் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 480 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 15 ரூபாவினாலும், நெத்தலி கருவாடு (தாய்) 50 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், காய்ந்த மிளகாயின் புதிய விலை 1,780 ரூபா எனவும், நெத்தலி கருவாடு 1,110 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.