பௌத்தத்தின் தோற்றம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள நாகரிகத்தின் தடங்களை ஆய்வு செய்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் ஒரு கருத்தரங்கு இஸ்லாமாபாத் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPRI) MISIS மியான்மர் உடன் இணைந்து கடந்த திங்கள்கிழமை (டிச5) நடைபெற்றது.
“காந்தார நாகரிகமும் பாகிஸ்தானின் புத்த பாரம்பரியமும்” என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.
குறித்த கருத்தரங்கு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள பௌத்தத்தின் வளமான கலாச்சாரம், வரலாறு மற்றும் நினைவுச்சின்னங்கள் தொடர்பில் பேசப்பட்டது.
பாகிஸ்தானின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை முன்னிறுத்துவதற்கு நன்கு தயாரிக்கப்பட்ட இரண்டு ஆவணப்படங்கள் தேவை என்று இந்த கருத்தங்கள் முக்கிய கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாகிஸ்தானில் அருங்காட்சியகங்கள் மற்றும் அதனுடன்தொடர்புடைய இலக்கியங்கள் மிகவும் பின்தங்கியதாக காணப்படுவதாகவும் அதற்கு புத்தூயிர் கொடுப்பதன் ஆவசியம் தொடர்பில் பேசப்பட்டது.
பாகிஸ்தானில் இவ்வாறான விடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுவதோடு நாட்டின் சுற்றுலாதுறைக்கும் பாரிய பங்கு வகிக்கும் என கருத்தரங்கில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.