நடப்பாண்டில் மிஸ் டூரிசம் வேர்ல்ட் தனது பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பியுள்ளது.
மிஸ் டூரிசம் வேர்ல்ட் இலங்கை, போட்டியாளர்களாக பிலிப்பைன்ஸ், செர்பியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை அறிவித்துள்ளது. இந்த போட்டியில் மேலும் பல நாடுகள் பங்குகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் ஊடாக 80 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிடவுள்ளனர்.
இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாதுறை மேலும் விருத்தியடைய வாய்ப்பாக அமையவுள்ளது.
மிஸ் டூரிசம் வேர்ல்ட் 75 ஆவது முறையாக நிகழ்வை குரோஷியா மற்றும் ரஷ்யா நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையின் சுற்றுலாதுறையை மேன்படுத்தும் நோக்கில் குறித்த நாடுகள் இந்த வாய்ப்பை இலங்கை்கு வழங்கியுள்ளது.
ஏனெனில்,குரோஷியா மற்றும் ரஷ்யா இலங்கையின் நிலமையை கருத்தில் கொண்டு சுற்றுலாதுறை மறுமலர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மிஸ் டூரிசம் வேர்ல்டின் குளோபல் இயக்குநர் டேவிட் சிங் தெரிவித்தார்.
இந்த செயற்திட்டத்தின் காரணமாக சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் வருவாய் ஈட்டி கொள்ள இலங்கைக்கு வாய்ப்பாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.