வெளிநாட்டிலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு நடைமுறையில் இருந்த COVID 19 தொற்று நோய்களின் கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு நீக்கியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரும் எந்தவொரு நபரும் COVID 19 தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், எந்தவொரு விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக நாட்டிற்குள் நுழையும் எந்தவொரு நபரும் பிசிஆர், ஆன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்ள அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் கூறினார்.
வெளிநாட்டினர் அல்லது சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தரையிறங்கிய பின்னர் கொவிட் தொற்று இருந்தால், அவர்கள் ஏழு நாட்களுக்கு ஒரு தனியார் மருத்துவமனை, ஹோட்டல் அல்லது அவர்கள் வசிக்கும் இடத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சிகிச்சை அல்லது தனிமைப்படுத்துதலுக்கான செலவை வெளிநாட்டினர் ஏற்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.