ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் காதல் கடிதம் எழுதிக்கொண்டிருக்கமால் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதியை சந்தித்து முஸ்லிங்களுக்கு உள்ள பிரச்சினை தொடர்பில் தீர்வு வேண்டும் என என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் ஏ.எல். கால்தீன் தெரிவித்தார்.
காணிப்பிரச்சினைகள், முஸ்லிங்களின் இருப்புக்கான பிரச்சினைகள், உரிமைகள், உடமைகளுக்கான பிரச்சினைகள், விவசாயிகள் உட்பட தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பேச முன்வரவேண்டும். முஸ்லிங்களுக்கு இலங்கையில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் ஏ.எல். கால்தீன் தெரிவித்தார்.
இன்று (06) செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு தெளிவை உண்டாகும் பொறுப்பை ஊடகங்கள் பொறுப்பேற்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் ஜனாதிபதி வழங்க இருக்கும் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம் தலைவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வு திட்டத்தை ஒற்றுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றேன்.
மறைந்த அஸ்ரப் மு.காவை உருவாக்கி முஸ்லிங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற போராடினார். ஆனால் இப்போது முஸ்லிங்கள் மத்தியில் அந்த நிலை மங்கிவிட்டது.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டத்தை முன்மொழிய வேண்டும். என்றார்.