ஓமானில் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.