Date:

பஸ் டிக்கெட் வழங்க தானியங்கி முறை

பஸ் பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

ஒவ்வொருவரும் தங்களது வங்கிகளின் வரவு அல்லது கடன் அட்டைகள் மூலம் பஸ் கட்டணத்தை செலுத்தும் வகையில் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நடத்துநர் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படும் என்பதால் அவற்றின் பின்பக்க கதவு மூடப்பட்டிருக்கும் என்றும் பயணிகள் தாங்கள் உள்ளே வரும் இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய சாதனங்களில் தங்களது வங்கி அட்டைகளை செலுத்த வேண்டும் என்றார்.

பஸ்களில் ஜிபிஎஸ் அமைப்பை அணுகும் திறன் கொண்ட புதிய மின்னணு சாதனங்கள் பொருத்தப்படும் என்றும் அவற்றின் மூலம் கட்டணம் அறவிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

வங்கி அட்டை இல்லாத பயணிகள், சாரதிக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் பஸ் கட்டணத்தை பணம் மூலம் செலுத்தமுடியும் எனவும் தெரிவித்தார்.

பஸ் உரிமையாளரின் அனுமதியுடன் சாரதி தமக்கு தேவையான உதவியாளரை வைத்திருக்க முடியும் என்றும் தெரிவித்த அவர், புதிய சாதனங்களை வழங்குவதற்கு மத்திய வங்கி ஏற்பாடு செய்யும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...