Date:

போதைக்கு அடிமையான மகனை பொலிஸில் ஒப்படைத்த தாய்

கிளிநொச்சியில் போதைப் பாவனைக்கு அடிமையான மகனை,பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.இந்தச் சம்பவம் தருமபுரம் பொலிஸ் பிரிவில்  இடம்பெற்றது.

வடமாகாணத்தில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்கள் தீவிரமானதை அடுத்து, போதைப்பொருள் பாவனை யில் இருந்து மீள்வதற்காக மறுவாழ்வு மையத்துக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பெற்றோர் போதைக்கு அடிமையான தமது பிள்ளைகளை தாமாக முன்வந்து மறுவாழ்வு மையத்தில் சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில், தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாயொருவர் தனது மகனை போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து மறுவாழ்வளித்து போதைப் பொருள் பாவனையில் இருந்து மீட்டுத் தருமாறுகோரி பொலிஸாரிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்துள்ளார்.

பொலிஸாரும் இந்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...

மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிரான மேல்முறையீடு நிராகரிப்பு

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குச் (Najib Razak) சாதகமாக உச்சநீதிமன்றம்...

மேஜர் ஜெனரல் மஜீத் இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதி நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...