Date:

தேசியப்பட்டியலில் ஆதிவாசி பிரதிநிதி – வேடுவத் தலைவர்

தேசியப்பட்டியலில் ஆதிவாசி பிரதிநிதியொருவர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டுமென வேடுவத் தலைவர் உருவரிகே வன்னியலத்தோ வலியுறுத்தியுள்ளார்.

பதுளை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 500,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத் தப்பட்டதாகவும், நேபாளத்தில் பழங்குடியினர் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தம்பானையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “எமது நாட்டில் முதல் தடவையாக பிரதேச சபை உறுப்பினராக பூர்வீக பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் என் மருமகள், ஹென்னானிகலவில் வசிக்கிறார். இந்த நாட்டின் முதல் மற்றும் பழைமையான சொந்தக்காரர்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ள எமது மக்களுக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் இல்லை என நான் வெகு காலமாக பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசுக்கு ஒரு முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது. ஓரிரு வாரங்களுக்குப் பிறகு, இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. ஆனால் பின்னர் மறதியில் மங்கிப்போனது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...