Date:

4 வயது சிறுவனின் உயிரை பறித்த கோர விபத்து

கல்கமுவ – குருநாகல் அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த இரண்டு பெண்கள், இரு சிறுமிகள் மற்றும் இரு சிறுவர்கள் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அதில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கமுவ பிரதேசத்தில் வசித்து வந்த சிறுவனே​ இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியின் சாரதி, பின்னால் பயணித்த இரண்டு பெண்கள், இரு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் கல்கமுவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று...

நாளை சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

சில பகுதிகளில் நாளைய தினம் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய...

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...