குரங்கு காய்ச்சல் தொற்றாளர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் விசேட நிபுணர் டொக்டர் சிந்தன பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருகின்றமையினால், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவான குரங்கு காய்ச்சல் தொற்றாளர்கள் வரக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் இல்லாத நோயாளர்களும் இலங்கைக்கு வரக்கூடிய சாத்தியம் உள்ளதாக அவர் கூறுகின்றார்.