பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், யுவதியொருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது