நியூசிலாந்து சுற்றுலாப் பயணியிடம் கொழும்பு நகரை சுற்றிக்காட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் வாடகை வாங்கிய ஆட்டோ சாரதி ஒருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
நியூசிலாந்து நாட்டவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சாரதியான சுற்றுலா வழிகாட்டியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகருக்குச் செல்வதற்காக சுற்றுலா வழிகாட்டியுடன் முச்சக்கர வண்டிக் கட்டணத்தை வினவ. அதன் சாரதி கொழும்பு நகரைச் சுற்றிவர 20 டொலர் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். ஒரு டொலர் 4,500 ரூபா என்றும், அந்தத் தொகையை ரூபாயாகத் தர வேண்டும் என்றார் ஆட்டோ சாரதி.
நியூசிலாந்துக்காரரும் ,ஆட்டோ சாரதி கேட்டுக் கொண்ட தற்கிணங்க, அந்தத் தொகையை வங்கி அட்டை மூகம் பெற்று சாரதியிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னரே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.