Date:

யாழில் போதையை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை!

அதிகளவில் உட்கொண்டால் போதையை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்கள் சிலர் விற்பனை செய்வதாகவும், சில மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சிட்டை இல்லாமல் அவர்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

ஆளுநர் மற்றும் நிதி அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட கலந்துரையாடலில் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள சில மருந்தகங்களில் 25 ரூபாய் பெறுமதியான குறித்த வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இல்லாமல் வழங்குவதாயின் அதனை 250 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை மருத்துவர்கள் சிலரும் இந்த மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்து மொத்த விற்பனை நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மருத்துவர் மற்றும் வவுனியாவை சேர்ந்த மருத்துவர் ஆகிய இருவரும் பெருந்தொகையாக வலி நிவாரணி மாத்திரைகளை கொள்வனவு செய்திருந்தமை தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்து.

இவ்வாறான  நிலையில் சில வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும் போது, அவை போதையை தர கூடியவை என்பதனால் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி உட்கொள்வது உயிராபத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம் அந்த மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இன்றி மருந்தகங்களில் விற்பனை செய்வது சட்டவிரோதமானதுமாகும்.

அதேவேளை அண்மைக்காலமாக யாழில் இளையோரிடையே போதைப்பழக்கம் அதிகரித்து காணபடுவதுடன், மரணங்களும் சம்பவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பால் தேநீர் விலையும் குறைப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின்...

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...