Date:

டொலர் தட்டுப்பாடு – இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் எண்ணிக்கை வீழ்ச்சி!

பால்மா மற்றும் திரவப் பாலை சந்தைக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் முன்னணி இறக்குமதியாளர்கள் மற்றும் பால்மா விநியோகஸ்தர்களுக்கு இடையில் நேற்று வர்த்தக அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பால்மா பொருட்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சந்தையில் பால்மா விநியோகத்தை அதிகரிக்க அல்லது திறந்த கணக்கு முறையின் கீழ் பால்மாவை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஊடாக டொலருக்குரிய சலுகைகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

வெண்ணெய், யோகட் மற்றும் திரவ பால் இறக்குமதி தொடர்பான தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், திரவ பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு வர்த்தக அமைச்சின் கீழ் உள்ள அரச அமைச்சுகள் ஊடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில் கறவை மாடுகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து உணவை வழங்குவதன் மூலம் பாலின் அளவு மற்றும் தரத்தை அதிகரிக்க முடியும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...

ரோஹிதவின் மகள் மற்றும் மருமகனுக்கு பயணத் தடை

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத்...

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...