இலங்கைக்கு அத்தியாவசியமான 383 வகையான மருந்துகளில் தற்போது சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டி.ஆர்.கே. ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதய நோயாளிகளுக்கான மருந்துகள் அவற்றில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.
383 மருந்துகளில் சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்த நேரத்தில் இந்த மருந்துகளை எமக்கு இருந்தால் நல்லது.
இதய பிரச்சனைகளுக்கு நாக்கிற்கு அடியில் வைக்க மாத்திரை ஒன்று உள்ளது. அடுத்த 2 வாரங்களுக்குள் ஒரு தொகுதி மாத்திரைகளையாவது கொண்டு வர வேண்டும்.
மாரடைப்புக்குக் கொடுக்கப்படும் இன்னொரு மருந்து இருக்கிறது, குறித்த மருந்தும் தற்போது குறைவடைந்து கொண்டு வருகிறது.இன்னொரு தடுப்பூசி இருக்கிறது. இந்த 3 மருந்துகளையும் விரைவில் கொண்டு வர வேண்டும்.- என்றார்.






