ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் உள்ள தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடை செய்யும் வகையிலான சட்டத்தை மீள கொண்டு வருவதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள தயாராகி வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிக்கின்றார்.
தற்போது இரண்டு வயது நிறைந்த குழந்தைகளின் தாய்மாருக்கு வெளிநாடு செல்ல அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியானது, பிரச்சினையானது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதனால், குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இரண்டு வயது நிரம்பிய குழந்தைகள் உள்ள தாய்மார் வெளிநாடு செல்வது பாரிய குற்றம் எனவும் அவர் கூறுகின்றார்.
குழந்தைக்கு ஐந்து வயது நிரம்பும் வரை தாய்மார்கள், குழந்தைகளுடன் இருப்பது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
குழந்தைகளை, குடும்பத்தாரே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதனாலேயே, ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிக்கின்றார்.






