Date:

நத்தார் தின கொண்டாட்டங்கள் வேண்டாம்- பேராயர் மெல்கம் ரஞ்ஜித்

எதிர்வரும் நத்தார் தின பண்டிகையை கொண்டாடும் வகையில், கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கர்தினால் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.

நீர்கொழும்பு புனித தெரேசா தேவாலயத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஏனைய இடங்களை அலங்காரம் செய்யும் வகையில், பணத்தை வீண்விரயம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டே, தான் இந்த கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இன்று பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு நத்தார் தினத்தில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு ஒரு நேர உணவையேனும் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...

இன்று காற்றுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...