கம்பஹா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்குடன் QR முறைக்கு அப்பால் சென்று எரிபொருளை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு QR முறை தடையாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டிய நிலையிலேயே மாவட்ட செயலாளர் இந்த அனுமதியை வழங்கி உள்ளார்.
இதன்படி தேவைக்கேற்ப QR முறைக்கு அப்பால் சென்று எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.