முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வாராந்தம் வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் ஒதுக்கத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் முச்சக்கரவண்டிக்கான பயணக் கட்டணத்தை குறைக்க தயாராக உள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டது. எனினும் வாராந்தம் வழங்கப்படும் பெற்றோல் ஒதுக்கம் போதுமானதாக இல்லை என தெரிவித்து அவர்கள் கட்டணத்தை குறைக்க முடியாதென தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கத்தை அடுத்த வாரம் முதல் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்திருந்தார்.
இவ்வாறு எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படுமாயின் பயண கட்டணத்தை குறைக்க முடியும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.