Date:

தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்கான கட்டணம் அதிகரிப்பு

எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்றைய தினம் (ஒக்.13) வெளியிட்டுள்ளார்.

புதிதாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக அறவிடப்படும் 100 ரூபா கட்டணம், தற்போது 200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொண்டு புதிதாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 250 ரூபா என்ற கட்டணம், தற்போது 500 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தேசிய அடையாள அட்டையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக அறவிடப்படும் கட்டணம் 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...