மாத்தளை மாவட்டம் கலேவெல பட்டிவெலவில் பல நாய்களுக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரேநேரத்தில் ஏழு நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பல நாய்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு கொல்லப்பட்ட நாய்களில் கர்ப்பமடைந்த நாய்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கோழிப் பண்ணையொன்றின் உரிமையாளர் மீது பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.