Date:

உணவகம் ஒன்றிற்கு முன்னால் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

கொழும்பு காலி பிரதான வீதியின் அஹுங்கல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மகிழூர்தியில் வருகை தந்த இருவர் வீதியோரத்தில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்றுள்ள நபரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...