மேல் மாகாணத்தில் சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மேல்மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
மக்கள் சமைத்த உணவினை வீண் விரயம் செய்வது குறைந்துள்ளமையே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் கடந்த வருடங்களில் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் உணவுக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 180 மெற்றிக் தொன் உணவுக்கழிவுகளே சேகரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.






