Date:

மகிந்தவிற்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசை வழங்க தயாராகும் மொட்டு கட்சி

மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றதாக அந்தக் கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளாகும்.

அன்றைய தினம் அவருக்குச் சிறப்பு பரிசாக பிரதமர் பதவியை வழங்குவதற்குப் பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்காக அவர்கள் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி வருகின்றனர்.

பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிக்கக் கோரும் கடிதத்தில் அந்தக் கட்சி உறுப்பினர்கள் கையொப்பங்களை இடுகின்றனர்.

பெரும்பான்மை (113) உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததும் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியை அவர்கள் கோருவர் என்று தெரியவருகின்றது.

பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த முயற்சிக்கு தமது சம்மதத்தை அளித்துள்ளனர் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் பெய்யும் கறுப்பு மழையால் சுவாசப் பிரச்சினைகள்

ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...