அத்துருகிரிய வெளிசுற்றுவட்ட அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்து, மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காலியிலிருந்து அத்துருகிரிய நோக்கிய பயணித்த வேன் ஒன்று, அதே திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜுப் வாகனமொன்றுடன் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் ஜுப் வாகனத்தில் பயணித்த சாரதி உள்ளிட்ட இருவர் மற்றும் வேனில் பயணித்த ஐந்து பெண்கள் காயமடைந்து, ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாலபே பகுதியைச் சேர்ந்த 57 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






