Date:

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

இலங்கையின் தமிழ் பேசும், சிங்கள மொழி நடிகர் தர்ஷன் தர்மராஜா (41) காலமானர்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்ததாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர், இறக்குவானை சென். ஜோன்ஸ் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

சிட்னி சந்திரசேகர என்பவரினால் 2008 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட சிங்கள சின்னத்திரை நாடகமான ‘ஏ9’ மூலம் தர்ஷன் தர்மராஜ் அறிமுகமானார்.

அவர் தமது சினிமா பயணத்தை அதே ஆண்டில் ‘பிரபாகரன்’ என்ற சிங்கள மொழித் திரைப்படத்தில் ஆரம்பித்தார். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் நடித்திருந்தார்.

இலங்கை தமிழர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிங்கள திரைப்படங்களான ‘இனியவன்’, ‘சுனாமி’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இனியவன் படத்துக்காக விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

அத்துடன், இலங்கையில் உருவான கோமாளி கிங்ஸ் என்ற பிரபல தமிழ் மொழி திரைப்படத்திலும் தர்ஷன் தர்மராஜ் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...