Date:

நவலோக்க மருத்துவமனைக் குழுமம், எதிர்கால சுகாதார உலகில் தனது 37வது காலடியை எடுத்து வைத்துள்ளது

இலங்கையின் தனியார் மருத்துவமனை சேவையின் முன்னோடியான நவலோக மருத்துவமனை குழுமம், எதிர்கால உலகின் மருத்துவமனை சேவைக்கு இலங்கையை இட்டுச் சென்று, அதன் 37 வது ஆண்டு சிறப்பை செப்டம்பர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மிகவும் பெருமையுடன் கொண்டாடியது. நவலோக மருத்துவமனை குழுமத்தின் 37வது ஆண்டு நிறைவை ஒட்டி பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

நவலோக்க குழும மருத்துவமனை, அதிநவீன மருத்துவ சாதனங்கள் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவ சிகிச்சைகளை அணுகுவதற்கு முன்னோடியாக உள்ளது. நவலோக்க குழும மருத்துவமனைகள் நாட்டில் உள்ள அதி நவீன சிகிச்சைகள் மற்றும் சிறந்த மருத்துவ மற்றும் தாதியர் தொழில்முறை ஊழியர்களையும் கொண்டுள்ளது.

நோயாளிகளின் ஆரோக்கிய நலனை உறுதி செய்வதற்காக, நவலோக குழும மருத்துவமனைகள் அதன் ஆண்டு நிறைவை அதன் மேம்பட்ட மற்றும் அதிநவீன முதன்மை பராமரிப்பு பிரிவு, Serene Center மற்றும் அதே கட்டிடத்தில் ஒரு புதிய கதிரியக்க பிரிவு திறப்பு விழாவுடன் ஆரம்பித்தது. இதன் மூலம் பல்வேறு நோயாளிகளின் தேவைகளை ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்ய முடிகிறது. இந்நிகழ்வில் நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச, உப தலைவர் அனிஷா தர்மதாச மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அதன்பின், மருத்துவமனை தாதியர் பயிற்சி பள்ளியில் பயின்ற 38க்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் பெற்றோர்களும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். நவலோக்க குழும மருத்துவமனைகள் அதன் ஊழியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய இரண்டின் மூலமாகவும் நோயாளிகளுக்கு சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் கவனிப்பை வழங்க முயற்சிக்கிறது. வருடாந்தர திறன் மதிப்பீட்டு விருது என்பது சுகாதார நிபுணர்களின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியாகும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சேவையாற்றிய 15க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு விருதுகளும் இதன்போது வழங்கப்பட்டன.

நாள் முழுவதும், நவலோக்க மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது, முதல் 100 நோயாளிகளுக்கு முற்றிலும் இலவச பரிசோதனை சேவைகள் வழங்கப்பட்டன. செப்டம்பர் 21 அன்று, மருத்துவமனை தனது ஊழியர்களுக்காக மற்றொரு மருத்துவ முகாமை நடத்தியது. இந்த சந்தர்ப்பத்தில், ஒக்டோபர் 2 ஆம் திகதி ஊழியர்களுக்கான விசேட கிரிக்கெட் போட்டியை நடத்தவும் வைத்தியசாலை நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.

“எங்களின் இந்த வெற்றிகரமான பயணம் கொழும்பில் மூன்றாம் நிலை சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் முதலாவது தனியார் வைத்தியசாலையை நிறுவியதன் மூலம் ஆரம்பமானது. பல ஆண்டுகளாக, நவலோக்க குழும மருத்துவமனைகள் அதன் மேம்படுத்தப்பட்ட உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்காக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது, இது உயர்மட்ட மருத்துவ பராமரிப்பு மற்றும் மருத்துவ விளைவுகளை வழங்க உதவுகிறது. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நோயாளிகளுக்கு மலிவு விலையில் சிறந்த சேவையை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்புதான் எங்களின் வெற்றியின் ரகசியம்.“ என நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கட்டான பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர்...

Eco Go Beyond Awardsஇல் மாணவர்களின் நிலைத்தன்மை முயற்சிகளைப் பாராட்டிய MAS

உலகளாவிய ஆடை தொழில்நுட்பப் பன்முக நிறுவனமான MAS Holdings, நிலைத்தன்மைக் கல்வி...

கொழும்பு மாநகரை தூய கரங்களில் ஒப்படையுங்கள் – பிரதமர் ஹரிணி அழைப்பு

மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்தப்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373