Date:

ஒரு லீற்றர் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் இலாபம், நட்டம் எவ்வளவு தெரியுமா?

இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் விற்பனை செய்யப்படுகின்ற ஒரு லீற்றர் ஒடோ டீசலுக்கு 31 ரூபா 88 சதம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூட்டுதாபனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு லீற்றர் ஒடோ டீசல் 461 ரூபா 88 சதத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டாலும், ஒடோ டீசல் ஒரு லீற்றர் 430 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், ஏனைய எரிபொருள்களின் ஊடாக பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு இலாபம் கிடைப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் ரக பெட்ரோலின் ஊடாக 77 ரூபா 35 சதம் இலாபம் கிடைக்கின்றது.

அத்துடன், ஒரு லீற்றர் 95 ஒக்டேன் ரக பெட்ரோலின் ஊடாக 187 ரூபா 43 சதம் இலாபம் கிடைக்கின்றது.

ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் ஊடாக 48 ரூபா 30 சதம் இலாபம் கிடைக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...