வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் அதிகாலை 12 மணியளவில் உட்புகுந்த இருவர் வீட்டின் கேற் மற்றும் கதவினை உடைத்து உட்பகுந்து, வீட்டின் கணவன் வெளியில் சென்ற நிலையில் மனைவியை தாக்கியதோடு சிசிடிவி கமராக்களையும் உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து வட்டு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டு பொலிசார் உடனடியாக பாதிக்கப்பட்ட 35 வயதான பெண்ணை வைத்தியசாலைக்கு அனுப்பியதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகளும் களவாடப்பட்டு சென்றதாக முறைப்பாட்டாளர் தெரிவித்தார்.
குடும்ப முரண்பாட்டினால் உறவினர்களுக்கிடையில் இடம்பெற்ற தாக்குதல் என வட்டுக்கோட்டை பொலிசார் தெரிவித்தனர்.