நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், மின்வெட்டு நேர அதிகரிப்பு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன் பிரகாரம், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீளமைக்கப்படும் வரை, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்படும்.
எனவே நாளை முதல் மின்வெட்டு அதிகரிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.