Date:

வைத்தியரின் தவறினால் உயிரிழந்த இளம் பெண்!

கொழும்பு – வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை தவறான காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதாவது, கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புத்திக்கா ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வத்தளையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்கள் உயிருக்கு போராடி வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் உறவு முறை சகோதரர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

குறித்த, அந்த பதிவில் “இவர் எனது உறவு முறை சகோதரி புத்திக்கா ஹர்ஷனி தர்மவிக்ரம.இன்று அவரது பிறந்த நாள் ஆனால் அவர் சவப்பெட்டியில் வீட்டிற்கு வந்துள்ளார். மருத்துவரின் தவறால் எங்கள் தேவதையை இழந்துவிட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...

சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத்...