Date:

ஜனாதிபதி இன்று ஜப்பான் பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷின்ஷோ அபே கடந்த ஜூலை 8ஆம் திகதி இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஏனைய கடன் வழங்குநர்களான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்க ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக முன்னதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...