Date:

போதையில் மாமனாரையும் சிறுவனையும் வெட்டி சாய்த்த நபர்

கல்கமுவ பிரசேத்தில் மண்வெட்டியால் தாக்கி 16 மற்றும் 67 வயதான இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று(20) காலை முதல் மது அருந்திவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திய நிலையில், மாலையில் மனைவியின் தந்தை மற்றும் அயல் வீட்டில் வசித்த உறவு முறை சிறுவனொருவனுடனும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரால் மண்வெட்டியால் தாக்கப்பட்ட மனைவியின் தந்தையான 67 வயதான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

16 வயது உறவு முறை சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...