Date:

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து விபச்சாரம் – இரு பெண்கள் கைது

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து நடைபெற்றுவந்த விபச்சார விடுதி குற்றப் புலனாய்வு பிரிவினால் முற்றுகையிடப்பட்டு இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம், நுகேகொட பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 45 மற்றும் 43 வயதான பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தளத்தில் விளம்பரங்களை காட்சிப்படுத்தி, சூம் தொழிநுட்பம் வாயிலாக க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களை இலக்குவைத்து,

நீண்டகாலமாக சூட்சமமான முறையில் இவ்வாறு பாலியல் தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த விளம்பரங்களை பார்வையிட்டு பல மாணவர்கள் பாலியல் விடுதிக்கு வருகை தந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, விசாரைணைகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...