புத்தளம் பகுதியில் லொறியொன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
புத்தளத்திலிருந்து தில்லையடி நோக்கிச் சென்ற லொறியொன்று வாடிவிடுதிக்கு முன்னாள் உள்ள மரத்தில் மோதூண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது லொறியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதியின் தூக்கத்தின் காரணமாகவே மரத்தில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளில் தெரிவித்தனர்.
இதன்போது லொறியின் முன்பக்கம் முற்றாக சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பாக புத்தளம் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.