Date:

வெளிநாட்டு கஞ்சா செடி வளர்த்தவர் நுவரெலியாவில் கைது

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை விசேட அதிரடி படையினர் நேற்று (15) மாலை 4 மணியளவில் கைது செய்துள்ளனர்

நுவரெலியா பிளக்பூல் பகுதியில் அமைந்துள்ள தனிவீடு ஒன்றில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நுவரெலியா பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே வெளிநாட்டு கஞ்சா செடிகள் வளர்ப்பில் ஈடுபட்ட 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இவரால் வளர்க்கப்பட்ட 70 தொடக்கம் 77 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது

இவ் கஞ்சா செடிகள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது எனவும் , வீட்டில் மூன்று அறைகளில் வளர்த்து வந்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புக்கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்

இதனை தொடர்ந்து நுவரெலியா பிளக்பூல் பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகிறதா ? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...